பிரித்தானியா திவாலாகவில்லை – கன்சர்வேடிவ் கட்சி ஒன்றுபட்டுள்ளதாக பாடெனோக் அறிவிப்பு
உலகின் மிக வெற்றிகரமான மற்றும் வலுவான நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருப்பதாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பாடெனோக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick) கன்சர்வேடிவ் கட்சியை விமர்சித்து, சீர்திருத்த UK கட்சியில் இணைந்தமை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
வாக்காளர்களிடம் நாடு திவாலாகிவிட்டது என கூறுவது அவர்களை விரக்தியடையச் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீர்திருத்த UK கட்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்தக் கட்சி எதிர்மறை அரசியலால் செயல்படுகிறது என்றும், அது நீடிக்காது என்றும் விமர்சித்தார்.
தற்போது கன்சர்வேடிவ் கட்சி ஒன்றுபட்டுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் திறன் கொண்டதாகவும் கன்சர்வேடிவ் காணப்படுவதாக பாடெனோக் வலியுறுத்தினார்.





