இந்தியா செய்தி

நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மோடிக்கு சவால் விடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை
இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது எனவும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2021 மாநில தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“அரசியல் சுற்றுலாப் பயணி நரேந்திர மோடி, வங்காளத்தில் உள்ள ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறார்.
அப்படியானால், மத்திய அரசு ஏன் வங்காளத்தின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான ரூ.24,275 கோடியை வன்மத்துடன் நிறுத்தி வைத்துள்ளது?

2021 சட்டமன்றத் தேர்தலில் அவமான தோல்விக்குப் பிறகு, வங்காளத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எங்கள் பகிரங்க சவாலை மோடி அரசாங்கம் ஏன் நிராகரித்துள்ளது?.

மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதிக்கான மத்திய அரசின் நிதியை முடக்கியதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்காக தனது சொந்தக் கருவூலத்திலிருந்து ரூ. 30,000 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!