புவிசார் அரசியல் : பண்டமாற்று முறைக்கு திரும்பும் உலக நாடுகள்?
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. டொலரின் மதிப்பு குறைந்து வருகின்ற நிலையில், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்வனவு செய்து குவித்து வருவதே தங்தக்தின் விலை உச்சம் தொட்டத்திற்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் செர்பியாவின் உயர் பாதுகாப்பு பெல்கிரேட் பெட்டகத்திற்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான தங்கக் கட்டிகள் சுவிஸ் விமான நிலையத்தின் ஓடுப்பாதையில் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் செர்பியாவின் மத்திய வங்கி ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பைத் தூண்டி, மத்திய வங்கியில் குவித்து வரும் நாடுகளின் பட்டியலில் செர்பியாவும் ஒன்றாகும்.
இவ்வாறாக பிற நாடுகளும் தங்கத்தை குவித்து வருகின்றன. தற்போது $4,643 அவுன்ஸாக பதிவாகியுள்ள தங்கமானது இந்த வருடத்தின் இறுதியை எட்டும்போது 5000 அவுன்ஸை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் மற்றும் இறையாண்மை கொண்ட முதலீட்டாளர்கள் – தங்கள் மூலோபாய இருப்புக்கள் டொலர் அடிப்படையில் இனி இருக்காது என நம்புகிறார்கள். ஏனெனில் அவை ஒரே இரவில் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் உலக நாணய அமைப்பின் பெயரளவிலான நங்கூரமாக டொலர் நம்பகத்தன்மையை இழந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு மொத்த மத்திய வங்கி இருப்புக்களில் 66 சதவீதத்தை கொண்டிருந்த டொலர் இருப்பானது தற்போது 57 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் சர்வதேச சந்தைகளில் டொலருக்கு இணையாக மாற்று நாணயங்கள் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே டொலரின் மதிப்பு குறைந்தாலும் பெரும்பாலும் அது வெளி உலகிற்கு இரகசியமாகவே உள்ளது.
பவுண்ட், யூரோ, யென் அல்லது யுவான் போன்ற பிற ஃபியட் நாணயங்கள் சர்வதேச வர்த்த பரிமாற்றங்களை கொண்டிருக்கவில்லை என்பதும் மற்றொரு காரணமாகும். இதன் விளைவாக, நிறுவனங்கள் உலகின் பழைமையான நம்பகமான மதிப்புக் களஞ்சியமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளன.
“தங்கம் எப்போதும் இறுதி பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது. எனவே அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் உறுதியற்ற காலங்களில் இந்த மூலதனம் கைக்கொடுக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
![]()
இதற்கமைய 50 மத்திய வங்கிகளில் நடத்திய கணக்கெடுப்பின்படி, சுமார் பாதி பேர் தங்கள் தங்க ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தங்கள் எல்லைகளுக்கு வெளியே வைத்திருக்கும் தங்கக் குவியல்களை மீண்டும் உள்நாட்டு பெட்டகங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வரலாற்று ரீதியாக, பல மத்திய வங்கிகள் லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் நியூயார்க் ஆகிய நாடுகள் தங்கத்தை அதிகளவில் சேமித்து வைத்துள்ளன. இங்கிலாந்து வங்கி உலகின் மிக முக்கியமான மையமாகும். தன் பெட்டகங்களில் அரை டிரில்லியன் டொலர்களுக்கு மேல் தங்க இருப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





