வெனிசுலாவின் முதல் பெண் ஜனாதிபதியாக வருவேன் – மச்சாடோ நம்பிக்கை
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, சரியான நேரம் வந்தால் நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
“எங்களுக்கு ஒரு தெளிவான இலக்கு உள்ளது. வெனிசுலாவை மீண்டும் ஒரு வளமான நாடாக மாற்றுவோம்.
சரியான நேரம் வந்தால், வெனிசுலாவின் ஜனாதிபதியாகவும், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு பதக்கம் வழங்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகே மச்சாடோ இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டிய உறுதிப்பாட்டுக்கு அங்கீகாரமாகவே அந்த பதக்கம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 3 ஆம் திகதி கராகஸில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தது.
பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவரை நியூயார்க்கிற்கு அழைத்து செல்லப்பட்டார்.





