கடந்த மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது.
இதில், நியூசிலாந்தின்(New Zealand) ஜேக்கப் டஃபி(Jacob Duffy), வெஸ்ட் இண்டீஸின்(West Indies) ஜஸ்டின் கிரீவ்ஸ்(Justin Greaves) மற்றும் ஆஸ்திரேலியாவின்(Australia) ட்செல் ஸ்டார்க்(Mitchell Starc) பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
இவ்விருதை ஆஸ்திரேலியாவின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ்(Pat Cummins) 2023ம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றிருந்தார்.





