பதவியேற்றபின் முதன்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ரிஷி சுனக், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
2 நாட்கள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார்.
மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரும் வரவேற்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபருடன் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)