மரினேரா கப்பல் கைப்பற்றப்பட்ட விவகாரம் : ரஷ்யா கடும் எச்சரிக்கை!
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறியதாக குற்றம் சாட்டி ரஷ்யாவின் கொடியுடன் பறந்த மரினேரா (Marinera) எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் சிறைப் பிடித்துள்ள நிலையில், ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த நடவடிக்கைக்கு பிரித்தானியாவின் வான்படைகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சகம், இந்த பறிமுதல் சர்வதேச கடல்சார் சட்டத்தை மீறுவதாகக் கூறியது. கிரெம்ளின் ஆலோசகர் அமெரிக்க-ரஷ்ய உறவுகளில் ‘நெருக்கடி நிலைமை’ ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்கப் படைகள் வெனிசுலாவிற்குள் நுழைந்து அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த பின்னர், அமெரிக்காவின் அடுத்த இலக்காக கிரீன்லாந்து மாறியது.
இந்த பதற்றங்களுக்கு மத்தியில் தற்போதைய நகர்வு, மூன்றாம் உலகப் போரை தோற்றுவிக்கும் அச்சங்களை உருவாக்கியுள்ளது.





