ஆஷஸ் தொடர் – 134 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், சிட்னி(Sydney) மைதானத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 97.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 384 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில், ஜோ ரூட்(Joe Root) 160 ஓட்டங்களும் ஹரி புரூக்(Harry Brook) 80 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், தனது முதல் இன்னிங்ஸை ஆரமிப்பித்த ஆஸ்திரேலிய மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 518 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் டிராவிஸ் ஹெட்(Travis Head) 163 ஓட்டங்களும் ஸ்டீவ் ஸ்மித்(Steve Smith) 129 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.





