பிரித்தானியாவில் புதிய கார் பதிவு 02 மில்லியனை கடந்தது – மின்சார வாகனங்கள் குறித்து எச்சரிக்கை
தொற்றுநோய்க்குப் பிறகு முதன் முறையாக, கடந்த ஆண்டு பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதில் சுமார் 5 லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (SMMT) தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியில் இது ஒரு நல்ல முன்னேற்றம் என சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் ஹாவ்ஸ்,பாராட்டியுள்ளார்.
ஆனால், மின்சார கார் விற்பனை அரசு நிர்ணயித்த இலக்குகளை எட்டும் அளவுக்கு இன்னும் வேகமாக வளரவில்லை என்றும் அவர் கூறினார்.
நுகர்வோர் தேவைக்கும் அரசின் இலக்குகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் தொழில்துறை தள்ளுபடிகள் நிரந்தரமானவை அல்ல என்றும் சங்கத்தின் தலைமை நிர்வாகி மைக் ஹாவ்ஸ்
மேலும் தெரிவித்துள்ளார்.





