பதுளை மாவட்டத்தின் 06 இடங்களில் நிலச்சரிவு – 04 பேர் உயிரிழப்பு!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காணாமல்போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று (26) ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.




