லண்டனில் உள்ள கவுன்சில்கள் மீது சைபர் தாக்குதல்!
லண்டனில் உள்ள பல கவுன்சில்கள் கடந்த திங்கட்கிழமை காலை முதல் சைபர் தாக்குதல்களுக்கு இலக்கானதாக அறிவித்துள்ளன.
கென்சிங்டன் (Kensington), செல்சியா (Chelsea), ஹேமர்ஸ்மித் (Hammersmith), புல்ஹாம் (Fulham), மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster City) சிட்டி உள்ளிட்ட பல கவுன்சில்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தரவைப் பாதுகாக்கவும், சேவைகளை மீட்டெடுக்கவும் தேசிய சைபர் பாதுகாப்பு மையத்துடன் (NCSC) இணைந்து பணியாற்றி வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலால் ஏதேனும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதா? மற்றும் தாக்குதலுக்கு பின்னால் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொலைபேசி இணைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளை பாதித்துள்ளதாகவும், மக்கள் சேவைகளை பெற தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




