ஸ்கொட்லாந்தில் புலம்பெயர்ந்தோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வகுப்பிற்கு எதிர்ப்பு!
ஸ்கொட்லாந்தின் (Scotland) கிளாஸ்கோவில் (Glasgow) உள்ள ஸ்பார்டன் குழந்தைகள் பாதுகாப்புக் குழு புலம் பெயர்ந்தோருக்கு ஆங்கில கல்வியை வழங்கும் பிரத்தியேக வகுப்பை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த வகுப்பானது வரும் திங்கட்கிழமை டால்மார்நாக் (Dalmarnock) ஆரம்பப் பாடசாலையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும், வீட்டிலேயே வைத்திருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
அலெக்ஸ் கெய்ர்னி (Alex Cairnie) என்பவர் தலைமை தாங்கும் இந்த நிகழ்வு, தாய்மொழி பேசாத மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆங்கிலப் பாடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த திட்டத்திற்கு தீவிர வலதுசாரி குழு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பை நடத்தும் நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதுடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் இனவெறி, மதவெறியை தூண்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





