இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்பது மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சபர்கமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல இடங்களுக்கு வானிலை ஆய்வுத்துறை மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்று திணைக்களம் எச்சரிக்கிறது.
மேலும் மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்துகிறது.
(Visited 4 times, 4 visits today)




