மாறும் வானிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியா முழுவதும் குளிர்காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் (Wales)மற்றும் ஸ்காட்லாந்தின் (Scotland) சில பகுதிகளில் 7 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
வடக்கு அயர்லாந்து ( Northern Ireland), வேல்ஸின் (Wales) சில பகுதிகள், வடக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் (Scotland) பெரும்பகுதிக்கு பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வடகிழக்கு இங்கிலாந்திற்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் உயரமான பகுதிகளில் 15-20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கூறிய பகுதிகளில் இன்றும் நாளையும் குளிர் காலநிலை பதிவாகும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)





