முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப் – பைடனுக்கு பட்டப்பெயர் வைத்தவருக்கு நேர்ந்த கதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மருத்துவக் காப்பீடு திட்டங்களில் எடை குறைப்பு மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சியின்போதே ட்ரம்ப் இவ்வாறு லேசாக உறங்கிய சம்பவம் கமராவில் பதிவாகியுள்ளது.
இதை “லேசாக அசந்த நேரம்” என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி ட்ரம்பிற்கு “The Nodfather” (தூக்க தந்தை) என கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் புதிய பட்டப்பெயரைச் சூட்டியுள்ளார்.
அவர் ட்ரம்ப் தூங்கிய 6 புகைப்படங்களைச் சேர்த்து, புகழ்பெற்ற “The Godfather” திரைப்பட போஸ்டரைப் போல வடிவமைத்து, எக்ஸ் பக்கத்தில் கிண்டலாகப் பகிர்ந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை “Sleepy Joe” என ட்ரம்ப் கிண்டலடித்த நிலையில், இப்போது அவருக்கே இந்த பெயர் திருப்பியுள்ளது.
ட்ரம்ப் உறங்கவில்லை என இதற்கு வெள்ளை மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.
இது ட்ரம்ப்பின் உடல்நலம் மற்றும் வயது குறித்த விவாதத்தை அமெரிக்க அரசியலில் மீண்டும் தூண்டியுள்ளது.





