பாகிஸ்தான் தற்கொலைக்குண்டு தாக்குதல் – நாடு திரும்பும் இலங்கை அணி!
இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் 16 இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (பிசிபி) மொஹ்சின் நக்வியும் ( Mohsin Naqvi) , உள்துறை அமைச்சரும், இலங்கை அணியின் அதிகாரிகளைச் சந்தித்து, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையிலேயே இலங்கை அணி நாடு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





