பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்திய கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன்
கிழக்கு டெல்லியின் பாண்டவ்(Pandav) நகரில், பீடி கொடுக்க மறுத்த நபரை கத்தியால் குத்தியதாக கஞ்சா போதையில் இருந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நொய்டா(Noida) சாலையில் உள்ள புதர்களுக்கு அருகில் நாய்கள் கூட்டமாக இருப்பதை அதிகாரிகள் கவனித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, வயிறு மற்றும் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் மயக்கமடைந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த கிருஷ்ணா சஹானி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் லால் பகதூர் சாஸ்திரி(Lal Bahadur Shastri) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இரத்தக் கறை படிந்த கத்தி மீட்கப்பட்டுள்ளது.
மேலும், சிறுவன் 8ம் வகுப்பு படிப்பை பாதியில் இடைநிறுத்தியவர் என்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளவர் என்றும் தெரியவந்தது.





