ஐரோப்பா செய்தி

ஜமைக்காவில் (Jamaica ) சிக்கியுள்ள பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜமைக்காவை (Jamaica ) மெலிசா (Melissa) புயல் தாக்கியுள்ள நிலையில் அங்கு சிக்கிக்கொண்டுள்ள பிரித்தானியர்களை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜமைக்காவிற்கு (Jamaica)  விடுமுறையை கழிப்பதற்காக சென்ற சுமார் 8000 பிரித்தானியர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்பதற்காக சில விமானங்கள் வாடகைக்கு எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான அறிவிப்பை வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்  (Commonwealth and Development Office)(FCDO) வெளியிட்டுள்ளது.

“Register Your Presence போர்டல் மூலம் ஏற்கனவே பதிவு செய்துள்ள அனைத்து பிரித்தானியர்களுக்கும் விமான நிலையங்கள் திறந்தவுடன் தானாகவே தொடர்பு கொள்ளப்பட்டு முன்பதிவு போர்ட்டலுக்கான (portal) இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பதிவு படிவத்தை அனுப்ப வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை +1 (876) 936 0700 அல்லது +44 (0)20 7008 5000 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 3 times, 4 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி