மருமகனுடன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை கைது!
தனது மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் 67 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் மருமகனும் கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
கம்பளை, உலப்பனை பகுதியிலுள்ள இவர்களது வீடு நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டபோது 200 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மருமகன் ஆட்டோ சாரதியெனவும், இவர்கள் நாவலப்பிட்டிய, கம்பளை உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
இவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
குறித்த ஓய்வுபெற்ற ஆசிரியையின் மகன் கடந்த 24 ஆம் திகதி ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





