பைசன் பார்க்க வந்த ரியல் கதாநாயகனின் பயிற்சியாளர்
விக்ரமின் மகன் துருவ் நடித்த பைசன் காளமாடன் படம் வெற்றிநடை போடுகின்றது. இது கற்பனைப்படம் இல்லை. உண்மையான கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று அனைவருக்கும் தெரியும்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மனத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கபடி விளையாட்டில் சாதனை படைத்து தமிழகத்தில் 2-வது நபராக அர்ஜுனா விருது பெற்று புகழ் பெற்றவர்.
இவரின் வாழ்க்கை வரலாறை வைத்துதே இயக்குனர் மாரி செல்வராஜ் மூலம் எடுக்கப்பட்ட படம் பைசன் காளமாடன் படம்.
இந்த நிலையில், பைசன் படத்தை ரியல் கதாநாயகன் மனத்தி கணேசனின் கபடி பயிற்சியாளர் தங்கராஜ், மனத்தி கணேசனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முதல் முறையாக பைசன் படத்தை பார்த்தனர்.
இந்த படத்தில் கபடி பயிற்சியாளராக இருந்த கதாபாத்திரத்தின் நிஜ பயிற்சியாளர் தங்கராஜ் என்பவரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் மனத்தி கணேசன் உள்ளிட்டோர் நேரில் சென்று சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இப்படி மாரி செல்வராஜ் நேரில் சென்று பயிற்சியாளர்களை கௌரவ படுத்திய நிகழ்வானது, செய்திகள் மற்றும் சமூகத் வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரும் மத்தியிலும் பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் கபடி பயிற்சியாளர் தங்கராஜ் அவரது குடும்பத்தினர், மனத்தி கணேசனின் நண்பர்களுடன் சேர்ந்து சாத்தான்குளத்தில் உள்ள திரையரங்கில் படத்தை முதல்முறையாக பார்த்தனர். தொடர்ந்து கபடி பயிற்சியாளர் தங்கராஜ் உடன் ரசிகர்கள் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






