இலங்கை

துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி – பாதுகாப்புக்கு அழைப்பு விடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் MP

ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான(Jagath Withana), தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று (24) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், களுத்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஜகத் விதான எம்.பி நடவடிக்கை எடுத்ததுடன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது ஒரு பாரதூரமான நிலைமை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பிரதி சபாநாயகர் மற்றும் ஜகத் விதான எம்.பி.யும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்