செய்தி பொழுதுபோக்கு வட அமெரிக்கா

அமெரிக்காவில் இனி தமிழ் திரைப்படங்களுக்கு சிக்கல்?

வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இதனால் அந்த நாட்டில் வெளியாகும் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப் படங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஏற்கெனவே வரி மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் 25 சதவிகிதம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தளவாடப் பொருட்கள் மீது கடுமையான வரிகளை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்கத் திரைப்படத் துறையான ஹாலிவுட், மற்ற நாடுகளால் ‘திருடப்பட்டுவிட்டது’ என்றும், குறிப்பாகக் கலிபோர்னியா மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படம் மீதும் 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் உள்ளிட்ட இந்திய திரைப்படங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி