முதல் படத்திலேயே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சாய் அபயங்கர்
சாய் அபயங்கர் இசையில் முதன்முறையாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் பல்டி. அப்படத்திற்காக அவருக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
அறிமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள வேலம்பாளையம் என்ற ஊரில் எதற்கும் துணிந்த நான்கு நண்பர்களின் கதையைச் சொல்கிறது.
இசைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
தமிழிலும் தெலுங்கிலும் பிரபலமான சாய் அபயங்கர், ‘பல்டி’ மூலம் முதல்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்தப் படத்தில் அவர் பாடிய ‘ஜாலக்காரி’ என்ற பாடல் ஹிட் சார்ட்களில் இடம்பிடித்திருந்தது. சொல்லப்போனால் சாய் அபயங்கர் இசையில் வெளியான முதல் படம் இந்த பல்டி தான்.
இந்த நிலையில், பல்டி படத்திற்காக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி பல்டி படத்திற்காக சாய் அபயங்கர் ரூ.2 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
மலையாள திரையுலகில் இதுவரை எந்தஒரு இசையமைப்பாளரும் வாங்காத தொகை அது. அதேபோல் தமிழில் ஜிவி பிரகாஷ், யுவன் ஆகியோரே அந்த அளவுக்கு தான் சம்பளம் வாங்கி வருகிறார்கள்.
ஆனால் சாய் அபயங்கர் முதல் படத்திலேயே அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருப்பது விவாதப் பொருளாக மாறி உள்ளது.






