Asia Cup M12 – 188 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது
அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆட்டத்தின் 2ஆவது ஓவரில் சுப்மன் கில் க்ளின் போல்டானர். அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து சஞ்சு சாம்சன் களம் இறங்கினார்.
இந்த ஜோடி அபாரமான விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாடினார்.
8ஆவது ஓவரின் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 15 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா இதே ஓவரில் ரன்அவுட் ஆனார்.
இறுதியில் இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.
ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஜிதேன் ராமநந்தி, ஆமிர் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.