மரணத்தை வெல்ல முயற்சி – ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தீவிர ஆய்வில் ரஷ்யா

ரஷ்யாவில் வாழ்நாளை நீட்டித்து மரணத்தை இயன்ற வரை தள்ளிப் போடும் நோக்கத்தில் நடந்து வரும் அறிவியல் ஆராய்ச்சிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மட்டும், இந்த ஆய்வுகளுக்காக சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் அரசு மற்றும் தனியார் துறைகளால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினின் மகள் மரியா வொரன்ட்சோவா இந்த ஆய்வுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் ஒரு மருத்துவ விஞ்ஞானி மற்றும் உயிரியல் ஆராய்ச்சியாளராகும்.
இந்நிலையில், ரஷ்ய அரசுத்துறைகள் மட்டுமின்றி, பல தனியார் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த வாழ்நாள் நீட்டிப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
72 வயதான புட்டின், இளம் தோற்றத்துடனும், சக்திவாய்ந்த உடல்நிலையுடனும் பளிச்சென்று தோன்றுகிறார். அவரது இந்த ஆரோக்கிய வாழ்க்கை முறை மற்றும் மரணத்தைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகளுக்கு எதிர்பாராத ஆதரவாக மாறியுள்ளன.
வயது வளர்ந்தாலும், செயல்திறன் குறையக்கூடாது என்ற புட்டினின் எண்ணம், அரசியல் மட்டுமல்லாமல் அறிவியல் துறையிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.