இலங்கையில் மீண்டும் கோர விபத்து – பெண் பலி – பலர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெலனிகம மற்றும் கஹதுடுவ இடையே நடந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொரியின் பின்னால் வந்த வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர், ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மூன்று குழந்தைகள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவல் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)