2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த குடியேற்ற நாடுகள் பட்டியல் வெளியான – ஐஸ்லாந்து முதலிடம்

குடியேறுவதற்கான உலகிலேயே சிறந்த நாடாக ஐஸ்லாந்து தேர்வாகியுள்ளது.
Immigration Index 2025 வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய அளவில் சுமார் 281 மில்லியன் மக்கள் சர்வதேச குடியேறிகளாக வாழ்கின்றனர், இது மொத்த மக்கள்தொகையின் 3.6% ஆகும்.
ஐஸ்லாந்து முதலாவது இடத்தை, சுவிட்சர்லாந்து 2வது இடத்தை இடத்தையும், லக்சம்பர்க் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த தரவரிசை பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதார நிலைத்தன்மை, டிஜிட்டல் இணைப்பு, குடும்பக் கூட்டிணைவு போன்ற முக்கியமான குறிகாட்டிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரச் செலவுகள், மருந்துகளின் கிடைக்கும் தன்மை மற்றும் செலவு, அரசாங்க ஆதரவு, மருத்துவ உள்கட்டமைப்பு, நிபுணர்களின் வலிமை ஆகியவை இந்த மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட முக்கியமான காரணிகளாகும்.