சிங்கப்பூரில் சட்டவிரோதமாக விநியோக வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் வெளிநாட்டவர் சட்டவிரோதமாக விநியோக வேலை செய்வர்களுக்கு எச்சரிக்கை
அவ்வாறு கண்காணிக்க முத்தரப்புப் பணிக்குழு அமைக்கப்படுவதாக தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதனைத் தெரிவித்தது.
Grab Singapore, மனிதவள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு ஆகியவை அதில் அங்கம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸோடும் அதன் துணை அமைப்புகளோடும் அவை சேர்ந்து செயல்படும்.
இணையத்தளச் சேவை ஊழியர் சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸும் அதன் துணை அமைப்புகளும் இணையத்தளச் சேவை ஊழியர்களின் நலன் குறித்துப் பேசி வருகின்றன.
இணையத்தளச் சேவை ஊழியர்களின் சம்பளம், பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
சட்டவிரோதமாக வேலை செய்வோரிடம் இருந்து வரும் போட்டியும் கவனிக்கப்படுவதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் குறிப்பிடப்படுகின்றது.