இலங்கை

அரசியல் வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது!

நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது  பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,  நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன  இதில் திருப்தியடைவதாகவும் அதனடிப்படையில் குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தது.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்