ஜெமினியில் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய 5 அம்சங்கள்…!

ஆண்ட்ராய்டு வெர்ஷன் 10 மற்றும் அதற்கும் மேற்பட்ட வெர்ஷன்கள் கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது ஜெமினி அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு கிடைக்கிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு ஜெமினி அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கான அணுகல் கிடைத்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு சாட்பாட் போல செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெமினி அப்ளிகேஷனில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜெமினி 2.5 வெளிவந்துள்ள இந்த சமயத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல புதிய அம்சங்கள் உள்ளன. ஜெமினி அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தும்போது தவறுதலாக நீங்கள் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட ஒரு சில அம்சங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். ஆனால், அதே நேரத்தில் இந்த அம்சங்களில் ஒரு சில ஜெமினி அட்வான்ஸ்டு சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக பணம் செலுத்தி பெறப்பட வேண்டிய அம்சங்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
Google Veo 2 என்பது டெக்ஸ்ட் டூ வீடியோ மாடல். அதாவது இதன் மூலமாக நீங்கள் எழுத்து அடிப்படையிலான விளக்கங்களைக் கொடுத்து 8 வினாடிகள் நீண்ட வீடியோக்களை உருவாக்கலாம். இது ஜெமினி அட்வான்ஸ்டு சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக பணம் செலுத்தி வாங்கப்பட வேண்டிய ஒரு அம்சம். இந்தியாவில் இதற்கான செலவு 1,950 ரூபாய். இந்த வீடியோக்கள் 720p ரெசல்யூஷன் மூலம் லேண்ட்ஸ்கேப் ஓரியண்டேஷனில் உருவாக்கப்படுகிறது.
இலவச சப்ஸ்கிரிப்ஷனுடன் நீங்கள் டீப் ரிசர்ச் அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், டீப் ரிசர்ச் வித் ஜெமினி 2.5 பயன்படுத்துவதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். பெயர் குறிப்பிடுவதைப் போல, இது கிட்டத்தட்ட உங்களுக்கு பர்சனல் ரிசர்ச் அசிஸ்டென்ட் போல செயல்படுகிறது. வெப்சைட்களை பிரவுஸ் செய்வது, தகவல்களை கண்டுபிடிப்பது, ரிப்போர்ட்களை உருவாக்குவது மற்றும் பலவற்றை இந்த AI ஏஜென்ட் உதவியுடன் நீங்கள் செய்யலாம். ஒரு தலைப்பை புரிந்து கொள்வது, இரண்டு ப்ராடக்டுகளை ஒப்பிட்டுப் பார்ப்பது போன்ற விஷயங்களில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஜெமினி அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் இமேஜ்களை உருவாக்கலாம். இதற்கு நீங்கள் மனதில் நினைக்கக்கூடிய படத்திற்கான விளக்கத்தை ஒரு சிறிய பிராம்ட்டாக டைப் செய்ய வேண்டும். உதாரணமாக பீர் குடித்து மகிழ்ச்சியோடு இருக்கும் ஒரு தவளை அல்லது மலை மீது நடனம் ஆடும் ஒரு நாய்க்குட்டி அல்லது உங்களுடைய கற்பனைக்கு எட்டக்கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் டைப் செய்யலாம். எனினும், சர்ச்சைக்குரிய படங்களை உருவாக்குவதற்கு ஜெமினி உங்களை அனுமதிக்காது. மேலும், நீங்கள் எதிர்பார்த்த சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு நீங்கள் நினைக்கும் விஷயத்தை விவரமாக டைப் செய்ய வேண்டும்.
அதாவது, உங்களுடைய தேடல் வரலாறு அடிப்படையில் உங்களுக்கான தனிப்பட்ட முடிவுகளை இந்த ஜெமினி அப்ளிகேஷன் வழங்கும். உங்கள் தேடல் வரலாற்றுடன் ஜெமினி அப்ளிகேஷனை இணைப்பதன் மூலமாக இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஜெமினி 2.5 ப்ரோ என்பது கூகுளின் மிகவும் நவீனமான ஒரு மாடலாக கருதப்படுகிறது. இதன் மூலமாக ஒரு வெப்சைட்டை உருவாக்குவதற்கான அட்வான்ஸ்டு கோடை உங்களால் பெற முடியும்.