இந்தியா நோக்கி பறந்த விமானத்தில் நடுவானிலேயே உயிரிழந்த நபர்!
இந்தியாவின் லக்னோவில் விமானம் தரையிறங்கிய பிறகு, ஒரு பயணி விமானத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஷிஃப் தவுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம் AI2845, டெல்லியில் இருந்து காலை 8.10 மணிக்கு சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான ஊழியர்கள் முதலில் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால், மருத்துவர்களின் உதவியை நாடி உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
அன்சாரிஸின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அவரது மரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.





