வட்டி விகிதத்தை 97 வீதமாக உயர்த்திய மற்றொரு நாடு!
ஆர்ஜென்டீனாவின் மத்திய வங்கி, வட்டி வீதத்தை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவற்கான பல அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்நிலையில்இ வட்டி வீதம் 97 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக ஆர்ஜென்டீன மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஆர்ஜென்டினாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 106 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)