உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை – ஒரேநாளில் 29 பில்லியன் டொலர் இழப்பு

உலகின் மிகப்பெரும் கோடிஸ்வரான எலான்மஸ்க் ஒரே நாளில் 29 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தற்போது அவரின் சொத்து மதிப்பு 321 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மஸ்க்கின் மொத்தச் சொத்து மதிப்பு 486 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தொட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் மஸ்க்கின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
எனினும் 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 80 நாள்களில் மட்டும் 132 பில்லியன் அமெரிக்க டொலரை அவர் இழந்துள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவதுதான்.
ஒரே நாளில் 29 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தாலும் உலகின் ஆகப் பெரும் செல்வந்தர் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.