உக்ரைனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க நிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி இருக்க வேண்டும் என்பதற்காகவும் பிரச்னைகளை முடிப்பதற்கு நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காகவும் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் உறுதியளித்ததாக டிரம்ப் நிர்ணயிக்கும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸெலென்ஸ்கி – டிரம்ப் காரசார விவாதம் நடைபெற்று சில நாள்களுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசும், மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கின.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றிமைத்துள்ளார்.