ஜெர்மனியில குடிநீரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஜெர்மனியில் மக்கள் தங்கள் குடிநீரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் குடிநீரில் கிருமிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி நிகழ்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பேடன்-வூர்ட்டம்பேர்க்கில் குடிநீரை மாசுபாடு காரணமாக அடிக்கடி கொதிக்க வைக்க வேண்டியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 23 இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு அது 63 இடங்களாக அதிகரித்துள்ளது.
FDP நாடாளுமன்றக் குழுவிலிருந்து நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மூலம் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
குடிநீரில் மாசுபாடு கண்டறியப்பட்டால், அது சுகாதார ஆபத்து குறித்த கவலைகளை எழுப்பினால், பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் அவசியம் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.