உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தை : முதல் சுற்று நிறைவு!

உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பேச்சுவார்த்தை இன்று (17.02) நடைபெற்றுள்ளது.
சவுதி அரேபியாவில் நடைபெற்ற குறித்த பேச்சுவார்த்தையின் முதல் சுற்றி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்த.
இருப்பினும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புடின் இடையேயான சந்திப்புக்கான நிபந்தனைகள் விவாதிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைகள் “நன்றாக நடந்தன” என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)