இலங்கையில் 250 ரூபாய்க்கு விற்பனையாகும் தேங்காய் – விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு தேங்காய் விலை, எதிர்காலத்தில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை குறைவடைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தேங்காய் விலை நிச்சயமாகக் குறையும் எனவும் தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
(Visited 24 times, 1 visits today)