உலகம் செய்தி

தொழிலை பறிக்கும் AI – மெட்டா பணியாளர்கள் பணிநீக்கம்

மெட்டா நிறுவனம் இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

மேலும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் டொலர் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, செலவினத்தைக் குறைக்கும்வகையில், கூகுள் நிறுவனமும் இரண்டு ஆண்டுகளாக தனது நிறுவனப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து, ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்த்துக் கொள்கிறது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி