உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சுவிஸ் குடிமகன் ஈரான் சிறையில் உயிரிழப்பு
ஈரானில் கைது செய்யப்பட்டு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டவர் சிறையில் இறந்துவிட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு நகரமான செம்னானில் உள்ள சிறையில் மற்றொரு கைதியுடன் அந்த நபர் “தற்கொலை செய்து கொண்டார்” என்று ஈரானின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் குடிமகனின் உயிரைக் காப்பாற்ற சிறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று நீதித்துறை நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நபரின் அடையாளம் குறித்து செய்தி நிறுவனம் எந்த விவரத்தையும் வழங்கவில்லை.
அவர் “உளவு பார்த்ததற்காக ஈரானிய பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டார்” என்றும், வழக்கு “விசாரணையில் உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.
(Visited 1 times, 1 visits today)