ஜிம்மி கார்டரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் அவரது அசாதாரண வாழ்க்கை வரையறுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி என்று ஜனாதிபதி திஸாநாயக்க தனது செய்தியில் கார்ட்டரை விவரித்தார்.
2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, உலகளாவிய சமாதானத்தை மேம்படுத்துவதில் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.
“அனைவருக்கும் சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அவரது மரபு வாழட்டும்” என ஜனாதிபதி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.