இலங்கையில் பாரிய வீழ்ச்சியடைந்த முட்டை விலை – உணவக வாடிக்கையாளர்கள் அதிருப்தி
இலங்கையில் பாரிய வீழ்ச்சியடைந்த முட்டை விலை – உணவக வாடிக்கையாளர்கள் அதிருப்த
இலங்கையில் முட்டை விலை குறைந்தாலும், முட்டைப் அப்பம், முட்டை ரொட்டி விலை குறையவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முட்டையின் விலை 25 – 30 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ள போதிலும் முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி ஆகியவற்றின் விலை முன்பைப் போலவே உள்ளது.
முட்டை விலை அதிகரிக்கும் போது இந்த உணவுப் பொருட்களின் விலை உடனடியாக உயர்த்தப்படுகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.
ஒரு முட்டையின் விலை 58 முதல் 60 ரூபாய் வரை இருந்தபோது, முட்டை அப்பம் மற்றும் முட்டை ரொட்டி 130 முதல் 140 ரூபாய் வரை உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)