ரஷ்யா “பலவீனமான நிலையில்” இருக்கிறதா? – விளக்கமளித்த புட்டின்!
டொனால்ட் டிரம்ப்புடனான எதிர்கால உறவுகள் மற்றும் சிரியாவின் நிலைமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ரஷ்ய தலைவர் புட்டின் கருத்து வெளியிட்டுள்ளார்.
முக்கியமாக ரஷ்யா “பலவீனமான நிலையில்” இருப்பதால், வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தை மாஸ்கோ எவ்வாறு கையாளும் என்பது ஊடகவியலாளர்களின் பிரதான கேள்வியாக இருந்தது.
இதற்குப் பதிலளித்த புதின், நான்கு ஆண்டுகளாக டிரம்புடன் பேசவில்லை, ஆனால் சந்திப்புக்கு தயாராக இருப்பதாக கூறினார். “ரஷ்யா பலவீனமான நிலையில் இருப்பதை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள், ஆனால் நான் வேறுபட்ட கண்ணோட்டத்தை வைத்திருக்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் போரைப் பற்றிப் பேசுகையில், சமீபத்தில் உக்ரேனிய நகரமான டினிப்ரோவைத் தாக்க பயன்படுத்தப்பட்ட Oreshnik இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என்று புடின் கூறியுள்ளார்.