பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையில்லை என தெரிந்து கண்ணீர் சிந்திய பிள்ளைகள்
பிரித்தானியாவில் Santa Claus என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா உண்மையில்லை என்று தெரிந்தவுடன் பிள்ளைகளுக்குப் பேரதிர்ச்சியடைந்து அழுத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹேம்ஷயர் மாநிலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் சமயக் கல்வியைக் கற்பிக்க தேவாலயத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சென்றிருக்கிறார்.
அவர் Santa Claus உண்மையில்லை என்று சொல்லியிருக்கிறார். அங்கிருந்த மாணவர்களின் சிறு வயதுக் கனவுகள் சிதைந்து போயின. மாணவர்கள் அழத் தொடங்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் உணர்வை அது பாழாக்கியதாகப் பெற்றோரும் மாணவர்களும் சங்கடப்பட்டனர்.
அவ்வாறு செய்திருக்கக்கூடாது என அந்தப் பிரதிநிதி கூறினார். தவறுக்கு வருந்துவதாகத் தெரிவித்த பாடசாலைகள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு கற்பனையே என்பதைப் பெற்றோர் மிகக் கவனமாகப் பிள்ளைகளிடம் உரிய வயதில் தெரிவிப்பது வழக்கமாகும்.