இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பதவி பிரமாணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை நவம்பர் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நாளை காலை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூட்டப்படவுள்ளதுடன் இதன்போது ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையை சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக நண்பகல் 12:00 மணிக்கு கொள்கை விளக்க உரை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது முற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி காலை 11.30 மணிக்கு கொள்கை விளக்க உரையை சமர்ப்பிக்கவுள்ளார்.
10வது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் ஆன்லைன் பதிவு இன்று (17.11) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.
குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்குச் சென்று பதிவு செய்ய முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர்களை உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.