வியாழக்கிழமை 80க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வியாழக்கிழமை (அக்டோபர் 24) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறின.
ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ நிறுவனங்கள் ஒவ்வொன்றாலும் இயக்கப்படும் ஏறத்தாழ 20 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆகாசா ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 14 விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஆகாசா ஏர் நிறுவனப் பேச்சாளர் வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், “நிலவரத்தைக் கண்காணித்து வரும் ஆகாசா ஏர் அவசரகாலச் செயல்பாட்டுக் குழுக்கள் பாதுகாப்பு, ஒழுங்குமுறை ஆணையங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றன.
“உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்,” என்றார்.
கடந்த 11 நாள்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.