இந்தியா: அசாமில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

அசாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அம்மாநிலத்தின் உடல்குரி மாவட்டம் தஸ்பூரை மையமாக கொண்டு இன்று காலை 7.47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
நிலநடுக்க மையத்தின் சரியான இடம் கவுகாத்தியிலிருந்து வடக்கே 105 கிமீ தொலைவிலும், தேஜ்பூருக்கு மேற்கே 48 கிமீ தொலைவிலும், அசாம்-அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் உள்ளது.
(Visited 17 times, 1 visits today)