ஐசிசி விருதுக்கு இரு இலங்கை வீரர்கள் தெரிவு

ஐசிசி 2024 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கமிது மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் மற்றொரு வீரர் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த மாதம் முடிவடைந்த நியூசிலாந்து-இலங்கை மற்றும் இங்கிலாந்து-இலங்கை டெஸ்ட் தொடரில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, இருவரும் ஐசிசி செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கமிது மெண்டிஸ் செப்டம்பரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், இதில் 90.20 சராசரியில் 451 ஓட்டங்கள் எடுத்தார்.
பிரபாத் ஜெயசூர்யா அந்த மாதத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
(Visited 24 times, 1 visits today)