சிங்கப்பூரில் திருமணத்தை தவிர்க்கும் மக்கள் – கடந்த வருடம் ஏற்பட்ட மாற்றம்
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட மக்களின் எண்ணிக்கை 24,355ஆகப் பதிவாகியுள்ளது.
அதற்கும் முந்தின ஆண்டைவிட (2022) அது 1.7 சதவீதம் குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு 24,767ஆக இருந்தது.
ஆண்டுதோறும் திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரர்களின் சராசரி எண்ணிக்கை 22,800 ஆகும். அதற்கும் முந்திய ஐந்து ஆண்டுகளைக் காட்டிலும் அது குறைவாகும்.
அதற்கும் முந்திய ஐந்து ஆண்டுகளில், ஆண்டுதோறும் திருமணம் செய்துகொண்ட சிங்கப்பூரர்களின் சராசரி எண்ணிக்கை 24,000 ஆகும். கடந்த ஆண்டு முதல்முறை திருமணம் செய்தோரின் இடைநிலை வயது ஆண்கள் 30.7 மற்றும் பெண்கள் 29.0 ஆகும்
பத்து ஆண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் இடைநிலை வயது சற்று உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு பதிவாகிய குடிமக்கள் திருமணங்களில் 6இல் சுமார் ஒன்று வெவ்வேறு இனங்களுக்கு இடையிலானது.