இலங்கை செய்தி

தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறும் பிரபலங்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று இரவு 06.00 மணி முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியாவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கும் சென்றுள்ளனர்.

இத்தே கந்தாவின் சத்தாதிஸ்ஸ தேரர் ஹொங்கொங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று டுபாய் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!