இத்தாலி சொகுசு படகு விபத்து: காணாமல் போன கடைசி நபரின் உடல் மீட்பு!
பிரிட்டிஷ் தொழில்நுட்ப அதிபரான மைக் லிஞ்சின் குடும்பப் படகு சிசிலியில் மூழ்கியதில் காணாமல் போன கடைசி நபரின் உடலை இத்தாலிய மீட்பு நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்,
இது அவரது மகள் ஹன்னா என்று நம்பப்படுகிறது என்று இந்த விடயத்திற்கு நெருக்கமான வட்டாரத்தை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியக் கொடியுடன் 22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற சொகுசுப் படகு கடந்த 19ஆம் திகதி இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது.
போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், அந்தப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆடம்பர படகின் சிதைவுகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுழியோடிகள் காணாமல்போன ஆறுபேரில் ஐவரின் உடல்களை மீட்டு நேற்று கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரிட்டனின் செல்வந்தரும் அவரது மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.விபத்துக்குள்ளான படகு அவரது மனைவிக்கு சொந்தமானது.